Saturday, April 10, 2010

Pdf இல் தமிழ் எழுத்துரு சிக்கலும் தீர்வும்.



பொதுவாக நாம் தமிழ் டாக்குமெண்டுகளை தயாரிக்கும் போது Open ஆபிஸிலோ அல்லது MS Office லோ நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒரு தமிழ் எழுத்துருவை வைத்து தயாரிப்பது வழக்கம் அவ்வாறு தயாரித்தவுடன் அதனை பிரிண்ட் செய்யவோ அல்லது நண்பர்கள் வீட்டிலோ கொண்டு செல்லும் போது நீங்கள் உருவாக்கிய எழுத்துரு அவர்களது கணினியில் இல்லாவிட்டால் தமிழ் எழுத்துரு நமக்கு தெரிவதில்லை.
இதுபோன்ற சிக்கல் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா? இதனை தடுக்க நாம் அந்த கோப்பை Pdf கோப்பாக மாற்றுவோம் அப்படி மாற்றும் போதும் சில தமிழ் எழுத்துருக்கள் வேலை செய்வதில்லை எனவே இதனை சரி செய்ய நீங்கள் Do pdf என்ற இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். முதலில் இந்த சுட்டியை சொடுக்கி do pdf ஐ பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவவும்.
பின்னர் உங்களது தமிழ் கோப்பை ஆபிஸ் மென்பொருளில் திறக்கவும். பின்னர் விசைபலகையில் CTRL+P ஐ அழுத்தவும் இப்போது Do Pdf ஐ தேர்ந்தெடுத்து OK செய்யவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் Embed Font என்பதை தேர்ந்தெடுத்து ok செய்யவும்.



இனி உங்களது எழுத்துருவும் இந்த கோப்போடு இணைந்து விடும். இனி இந்த எழுத்துரு இல்லாத கணினியிலும் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக இருப்பதை காணலாம்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.